Sunday 7 February 2010

Pray Event for JAPANES Victims

 கடந்தவாரம் சுனாமி மற்றும் பூமியதிச்சியால் பாதிக்கப்பட்ட ஜப்பானிய மக்களின் நல்வாழ்வுக்காகவும் அவா்களின் நாட்டின் சுபீட்சம் என்பவற்றிற்காகவும் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நிதியத்தியத்தின் ஏற்பாட்டின்பேரில் அதன் தலைவர் சங்கைக்குரிய மௌலவீ அல்ஹாஜ் ஏ. அப்துர்றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவா்களால் விசேட துஆ பிரார்தனை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனா். (வீடியோ இணைப்பு)

25வது வருட ஹாஜாஜீ மாகந்தூரி

கரீப் நவாஸ் பௌன்டேஸன் நிறுவனம் வருடாந்தம் நடாத்திவரும் கரீப் நவாஸ் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ (றழி ) அவா்களினதும் அவா்களின் புதல்வர் ஸர்தாரே ஸா்வார் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ (றழி) அவா்களினதும் 25வது வருட உா்ஸே முபாறக் இன்ஷாஅல்லாஹ் இவ்வருடமும் (2011) மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மேலும்.............

ஷெய்குதாவூத் வலிய்யுல்லாஹ் அவா்களின் 20வது வருட கந்தூரி நிகழ்வுகள்

அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் நிதியத்தியத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் இந்தியாவின் முத்துப்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்ற ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்குதாவூத் வலிய்யுல்லாஹ் அவா்களின் 20வது வருட நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. 
கொடியேற்ற நிகழ்வுகள் - 22.04.2011 வௌ்ளி பி.ப 5.00 மணி
கந்தூரி நிகழ்வுகள் - 24.04.2011 இரவு 9.00 மணி 
இம்மூன்று நாள் நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதோடு இறுதி நாள் தபர்றுக் விநியோகமும் இடம்பெற்றது.

Youth Clubs

Beyond the abovementioned institutions followings are also working with Al Haj Abdul Jawadh Alim Waliullah Trust.

1)      Rabbaniyyah Youth Club
2)      Rabbaniyyah Sport Club
3)      Rabbaniyyah Women Forum
4)      Khwajaajee Literary Art Circle

புனித குத்பிய்யஹ் கந்தூரி நிகழ்வுகள்

 புனித குத்பிய்யஹ் சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வருகின்ற குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல்காதிர் ஜீலானி (றழி) அவா்களின் 25வது வருட கந்தூரி நிகழ்வுகள் 27.03.2011 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றன. இது தொடர்பில் 24.03.2011 அன்று கந்தூரி நடவடிக்கைக்கான அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது. இதில் பல்லாயிரம் மக்களுக்கு தபர்றுக் அன்னதானமும் வழங்கப்பட்டது.

அலுவலகம் திறத்தலும் கொடியேற்ற நிகழ்வும்

நூல் வெளியீடு

அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ (தால உம்றுஹு) அன்னவா்கள் எழுதிய தீபுல் வர்தஹ் பீ ஷர்ஹில் புர்தஹ் என்ற அறபி மற்றும் தமிழ் மொழியிலான நூல் வெளியீடு இன்ஷா அல்லாஹ் நோன்புப்பெருநாளன்று வெளியிடப்பவிருக்கிறது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாய் அழைக்கின்றோம்.

இடம் - பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல்
               காத்தான்குடி -05.
காலம் - 31.08.2011 புதன்கிழமை காலை
நேரம் - 9.00 மணி

Saturday 6 February 2010

வௌ்ளப்பாதிப்பு தொடா்பான விஷேட செய்திகள்

செய்திகள் ........
வீடியோ.....

காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸ்

அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நிதியத்தியத்தின் தலைவரான சங்கைக்குரிய மௌலவீ அல்ஹாஜ் ஏ. அப்துர்றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவா்களின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டு புனித காதிரிய்யஹ் திருச்சபையால் மாதாந்தம் நடாத்தப்பட்டுவருகின்ற புனித காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸில் விஷேட நிகழ்வுகளும் துஆப்பிரார்தனையும் இடம்பெற்றன.


மௌலானா வாப்பா கந்தூரி

புனித வித்ரிய்யஹ் சரீப்

​மௌலானா வாப்பா கந்தூாரி

அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் நிதியத்தியத்தினால் நடாத்தப்படும் அஷ்ஷெய் அப்துா்ரஷீத் கோயாத்தங்கள் மௌலானா வாப்பா அவா்களின் 14வது வருட கந்தூரி 30.01.2011 ஞாயிற்றுக்கிழமை பி.ப 5.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடா்ந்து கத்முல்குா்ஆன் வைபவம், மௌலித் ஷரீப் என்பன இடம்பெற்று இரவு 9.00 துஆப்பிரார்தனை இடம்பெற்று தபா்றுக் விநியோகத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன. 



அல்மத்ரஸதுர் றஹ்மானிய்யஹ் பரிசளிப்பு விழா

அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நிதியத்தியத்தின் இணைப்பு நிறுவனமான காத்தான்குடி-6, ஜன்னத் மாவத்தையில் அமைந்திருக்கும் அல்மத்ரஸதுர் றஹ்மானிய்யஹ் குர்ஆன் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு வைபவம் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம்வலிய்யுல்லாஹ் நிதியத்தியத்தின் அனுசரணையுடன் 18.01.2011 செய்வாய்க்கிழமை பி.ப 4.00 மணிக்கு ஆரம்பமானது. இந்நிகழ்வில் பிரபல உலமாஉகள், அறிஞர்கள், அரசியல் பிரமுகா்கள்,  முக்கியஸ்தா்கள் மற்றும் நிர்வாக உறுப்பினா்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா். இதில் மாணவா்களுக்கு பாடசாலை உபகரணங்களும், பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.


புனித வித்ரிய்யஹ் சரீப்

வருடாந்தம் நடைபெற்றுவரும் புனித வித்ரிய்யஹ் ஷரீப் 05.01.20011 புதன் கிழமை இஷாத்தொழுகையின் பின் ஆரம்பமாகவுள்ளது. தொடா்ந்து 29 தினங்கள் புனித வித்ரிய்யஹ் ஷரீப் ஓதப்பட்டு 02.02.2011 அன்று நிறைவுபெறவிருக்கிறது.

05.01.2011 அன்றைய ஆரம்ப நிகழ்வு தொடப்பானது